நாகர்கோவில், ஜூலை – 26,
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் உள்ள வருவாய் கூட்ட அரங்கில் ஊராட்சி திட்ட குழு மாவட்ட தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவையாவன:-
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் உள்ள துறைகளுக்கு மக்கள் எளிதில் சென்றடையும் விதமாகவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இணைப்பு கட்டிடத்தின் நுழைவாயினை உடனடியாக திறக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்ரூத் திட்ட வேலைகளை விரைந்து முடிக்கவும், மாவட்ட திட்டக்குழு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து தரக் கேட்டும், சிற்றாறு – 2, அணை (ஆலஞ்சோலை பகுதி யில் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி படகு சவாரி விடுவதற்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்க கேட்டும், குலசேகரம் பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக தரம் உயர்த்திட தமிழக அரசை கேட்டும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைத்திட காவல்துறையை கேட்டும், திற்பரப்பு இடது கரை மற்றும் வலது கரை சாணல் தூர்வாரி உடைப்பினை சரி செய்தல் ,திரு நந்தி கரையிலிருந்து பேச்சுப்பாறை அணைக்கு செல்லும் சானல் கரை பாதை திரு நந்திக்கரை பாலம் சமீபம் இருந்து அஞ்சுகண்டறை வரை பக்க சுவர் அமைத்து சாலை மேம்பாடு செய்வும், திற்பரப்பு பேரூராட்சி திரு நந்திக்கரையிலிருந்து பேச்சுப்பாறை ஊராட்சி முகழியடி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற குழித்துறை வாவுபலி பொருட்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் மாவட்டம் முழுவதிலிருந்தும் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்தும் இயக்கப்பட வேண்டியும், புனலூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் தற்போது விரைவு ரயில் ஆக இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ரயிலை திண்டுக்கல் , திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டித்து தினசரி ரயிலாக இயக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் மாநகராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை நிறுத்த கோரியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தமிழக எல்லைப் பகுதிக்கு மிக மிக அருகில் விழிஞ்ஞம் பகுதி புதிய துறைமுகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்தத் துறைமுகத்தால் தமிழ்நாட்டில் தென்பகுதியான கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மாவட்டம் பகுதிகளுக்கு கிடைக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள் சரக்கு போக்குவரத்து தொழில் முன்னேற்றம் குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆராய உடனடியாக தமிழக அரசு அனைத்து துறை சார்ந்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் , அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைத்து உள்ள தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தமிழ்நாடு அரசு பெற்று அதன் அடிப்படையில் தென்மாவட்ட வளர்ச்சிக்காக திட்டங்களை கொண்டு வர கேட்டும் ,
குமரி மண்ணில் பிறந்த பல்சுவை கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் மணி மண்டபத்தை தோவாளையில் அமைத்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றம்- மேலும் குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை அடியோடு ஒழிக்க வேண்டும்,விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டகுழு உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் முறையிட்டனர்.