கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 31
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு
கிருஷ்ணராயபுரம், உப்பிடமங்கலம் கோவக்குளம் மற்றும் சித்தலவாய் ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை நேற்று கலெக்டர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உரிய நேரத்தில் மருந்து மாத்திரை சிகிச்சைகள் கிடைக்கிறதா? என்பதையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். சித்தலவாய் ஊராட்சி எஸ். முனியனூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோவக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்காக சமைக்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவுகள் கண் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் மருந்தகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் செழியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார் உள்பட பலர் உடனி ருந்தனர்