ஈரோடு மே 12
ஈரோடு கருங்கல்பாளையத்தில் எல்லப்பன் விநாயகர் மதுரைவீரன கோவில் உள்ளது இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 6 ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது 7 ம் தேதி கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் கோ பூஜை போன்ற பூஜைகள் நடந்தது அன்று காலை காவிரி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது 8 ம் தேதி சுவாமி சிலைகளைப் பீடத்தில் வைத்து எந்திரம் மற்றும் நவரத்தினம் வைத்து அஷ்ட பந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது
நேற்று காலை அருள் கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது இதை தொடர்ந்து எல்லம்மன் கோபுரத்துக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது
இதை தொடர்ந்து மகா அபிஷேகம் தீபாரதனை பிரசாதம் வழங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது
இந்த கும்பாபிஷேக விழாவை நடராஜ சிவாச்சாரியார் மற்றும் ரமணிசிவம் ஆகியோர் நடத்தி வைத்தனர்
இதற்கான ஏற்பாடுகளை கருங்கல்பாளையம் நிர்வாக குழு தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்
கும்பாபிஷேக விழாவையொட்டி அகிலா ஜுவல்லரி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சுமார் 4000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.