நாகர்கோவில். ஜூலை – 23,
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருங்கல் காவல் நிலைய போலீசார் தன்னுடைய வீடு புகுந்து அத்துமீறி அராஜக போக்குடன் நடந்து கொண்டதாகவும், போலீசாரின் தொடர் அச்சுறுத்தல் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் கருங்கல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மனு அளிக்கப்பட்டது. அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-
குமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் பணபலம் படைத்த மத்திகோடு பகுதியை சார்ந்த விஜிடிசன் என்பவரின் தூண்டுதலில் கருங்கல் போலிசார் பிறைட் என்பவரிடம் பொய் புகார் பெற்று 8/7/2024 முதல் ஊரில் இல்லாத சிபிஐ எம்-எல் கட்சி கிளியூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தோழர் ஜெபர்சன் ராஜ் வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ள பெண்களை இழிவாக பேசியது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு தனது குடும்பத்தாரை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கருங்கல் காவல் நிலையத்தார் மீது நடவடிக்கை எடுத்து தங்களைைைை பாதுகாக்கும் படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசாரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் குமரேசன், சிபிஐ (எம் எல்) ரெஸ்டார் கட்சி மாவட்ட செயலாளர் மணவைகண்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் கூறும்போது
போலிசார் உடனடியாக இந்த போக்கை நிறுத்த வேண்டும் மேலும், மேலும் இந்த அடாவடித்தனத்தை தொடர்ந்தால் கருங்கல் காவல் நிலையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையில் தோழமை இயக்கங்களின் துணையோடு முற்றுகை போராட்டம் நடத்தக்கூடும் என்று தெரிவித்தனர்.