நாகர்கோவில் ஜூன் 4
அஞ்சுகிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். பேரூர் துணைச்செயலாளர் ஆர் வி சுந்தர்ராஜ், பேரூராட்சித் துணைத் தலைவர் காந்திராஜ், கவுன்சிலர்கள் வீடியோ குமார், அய்யா சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுயம்புலிங்கம், ஜெயக்கொடி, பாலன், சுயம்பு, ரவி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜேம்ஸ்டவுணில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் இளங்கோ, துணைச் செயலாளர் ஆர்வி சுந்தர்ராஜ், கவுன்சிலர் வீடியோ குமார், தாணுமூர்த்தி, ராஜ் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு ஏற்பாட்டில் கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு 101 பேருக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மருங்கூரில் பேரூர் செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மயிலாடியில் பேரூர் செயலாளர் மயிலை டாக்டர் சுதாகர் தலைமையில், சிறுபான்மை அணி மயிலை வேதமணி, பேரூர் பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக நிர்வாகிகள் , மாணிக்கம், தேசிங்கு, அன்னமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரத்தில் பேரூர் செயலாளர் அய்யப்பன் தலைமையில், விக்டர் நவாஸ், தாணுமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து இனிப்பு வழங்கினார். திமுக நிர்வாகிகள் , பலர் கலந்து கொண்டனர்.