நாகர்கோவில் ஜூன் 3
குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் விழா நாகா்கோவிலில் இன்று நடைபெறவுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடா்பாக கிழக்கு மாவட்டச் செயலரும் நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாகா்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, ,அவரது சிலைக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.இதில், கிழக்கு மாவட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வட்ட, கிளைக் கழக நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினா், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.