நாகர்கோவில் ஆக 19
மறைந்த கலைஞர் கருணாநிதியை புகழாமல் யாரும் இருக்க முடியாது, ஏனென்றால் கலைஞர் ஒரு சரித்திர சகாப்தம், அவர் தொடாத இடமில்லை,அவர் தொட்டு துலங்காத இடமும் இல்லை, எனவே பிரதமர் மோடி கலைஞரை பாராட்டியதை அரசியலாக பார்க்க வேண்டியதில்லை. அமைச்சர் மனோ தங்கராஜ்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில் திமுக இளைஞரணி சார்பில்” என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி நடைபெற்றது, இந்த பேச்சு போட்டியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச்சு போட்டியை தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது அவர் கூறுகையில்” இன்றைய காலச் சூழலில் திராவிட இயக்க சித்தாந்தத்தை உலகிற்கு சொல்ல கூடிய கடமை, கட்டுப்பாடு உள்ளது,அடுத்த தலைமுறை பேச்சாளர்களை உருவாக்குகின்ற நிகழ்வை முன்னெடுக்கின்ற பொறுப்பு திராவிட இயக்கங்களுக்கு உள்ளது,சாதிய கட்டமைப்பு தான் இந்நாட்டின் பல்வேறு பிரிவினைகளுக்கு வித்திட்டு அடிமைத்தனங்களை உருவாக்கி மக்களை பல்வேறு அநீதிகளுக்கு ஆளாக்கி உள்ளது,இதை நியாயப்படுத்துகின்ற விதமாக அமைதியாக பேசி சமூகங்களை இணைக்கின்ற ஒன்று என்று சொல்லக்கூடிய அமைப்புகளின் அவலம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த சூழலில் பகுத்தறிவு கருத்துக்களை சொல்லுகின்ற ஆயிரம் ஆயிரம் மக்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணியை திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் முதல்வர் மு க.ஸ்டாலின், இளைஞர் அணி மூலம் முன்னெடுத்துள்ளார்.
மறைந்த கலைஞர் கருணாநிதியை புகழாமல் யாரும் இருக்க முடியாது, ஏனென்றால் கலைஞர் ஒரு சரித்திர சகாப்தம், அவர் தொடாத இடமில்லை,அவர் தொட்டு துலங்காத இடமும் இல்லை, எனவே பிரதமர் மோடி கலைஞரை பாராட்டியதை அரசியலாக பார்க்க வேண்டியதில்லை, எத்தனையோ நாட்டின் பிரதமர்கள் கலைஞரை பாராட்டி இருக்கிறார்கள், அவர்களை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தவர் கலைஞர் அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.