ராமநாதபுரம், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்களம் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஏற்பாடு
ராமநாதபுரம், நவ.18-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்களின் அன்பு மகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் மும்மத வழிபாடு மற்றும் கோயில்களில் சிறப்பு பூஜை, சென்னை மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமையில் தமிழக முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றது, என்று, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நவம்பர் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு எனது ஏற்பாட்டில்
சென்னையில் மணலி, திருவெற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள், பெண்களுக்கு இலவச சேலைகள் தமிழ்நாடு பனைமர தொழிலாளிகள் வாரிய தலைவர் சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான் மற்றும் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கே.சி.ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து வழங்கினோம். இதே போல தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடை பெற்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில்
மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஏற்பாட்டில் கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையம் முன்பு 250 நபர்களுக்கு காலை உணவு மற்றும் முதியோர் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிற்பகல் 12மணியளவில் பரமக்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜதுரை ஏற்பாட்டில் 250 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொண்டி இளைஞரணி செயலாளர் பிச்சைமுத்து ஏற்பாட்டில் அன்பாலயம் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியும் இறைவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இராமநாதபுரம்
வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ராமநாதபுரம் பாரதி நகரில் மண்டபம் ஒன்றிய தலைவர் பால் முனீஸ்வரன்
ஏற்பாட்டில் நாடார் பேரவை சார்பாக 250 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில்
ராமநாதபுரம் மாவட்டம் நாடார் பேரவை மாவட்ட தலைவர் கு . வேல்முருகன் மாவட்ட இளைஞரணி தலைவர் மு கார்த்திகேயன் மாவட்ட செயலாளர் மோகன் தாஸ் மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ் மாவட்ட துணைத் தலைவர் முனியசாமி மாவட்ட மாணவரணி செயலாளர் ராகுல் வாசன் ஏர்வாடி நகர் இளைஞர் அணி தலைவர் பா வெங்கடேஷ் மண்டப ஒன்றிய தலைவர் பாலமுனிஸ்வரன் ராமநாதபுரம் மாவட்டம் நகர் தலைவர் அஜித் குமார் சமத்துவ மக்கள் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சூரஜ் ஆபர் சமத்துவ மக்கள் கழகம் ஆண்டாள் ஒன்றிய தலைவர் கார்த்திக் அனைவரும் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்
இவ்வாறு, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் கூறினார்.