மதுரை நவம்பர் 23,
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1434ம் பசலி திருக்கார்த்திகை திருவிழா 05.12.2024 (கார்த்திகை 20-ந் தேதி) வியாழக்கிழமை முதல் 14.12.2024 (கார்த்திகை 11ந் தேதி) சனிக்கிழமை முடிய பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. வருகின்ற 05.12.2024 கார்த்திகை 20 தேதி வியாழக் கிழமை கொடியேற்றம்
காலை 08.30 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் நடைபெறும். 12.12.2024 கார்த்திகை 27 ந் தேதி வியாழக் கிழமை பட்டாபிஷேகம் மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெறும். 13.12.2024 கார்த்திகை 28 ந் தேதி வெள்ளி கிழமை காலையில் திருத்தேரோட்டம் (காலை 09.00 மணி முதல் 09.30 மணி முடிய)
மாலை (6 மணி) மலை தீபம் நடைபெறும். 14.12.2024 கார்த்திகை 29 ந் தேதி சனிக்கிழமை தீர்த்தம் உற்சவம் நடைபெறும் என்பதை அருள்மிகு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் எம்.சூரிய நாராயணன் கோவில் நிர்வாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர்
சத்யபிரியா மற்றும் அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவர், சண்முகசுந்தரம், இராமையா மற்றும் கோவில் நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.