திருமங்கலம்
ஜூலை 26-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்
கார்கில் போரில் வெற்றி பெற்ற 25 வது ஆண்டு விழாவும் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழா ஜெயதுர்கா ஆர்மி பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க ராணுவப் பிரிவு மாநிலத் தலைவர் லெப்ட்டினன் நாயக் ராமன் தலைமையில்
மேற்கு மாவட்ட இராணுவப் பிரிவுத் தலைவர் ஆண்டி மாநில துணைத் தலைவர் மாணிக்க நடராஜன், மாநில செயலாளர் ஆனந்தம் ஜெயம் மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் அசோக் குமார்
ஆகியோர் முன்னிலையில்
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர்
பயிற்சி பள்ளியில் ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அக்கினி பாத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாநிலத் தலைவர் ராமன் பேசுகையில் அக்கினி பாத் திட்டத்தில் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த போது அவருக்கு மத்திய அரசு உரிய இழப்பீடுகளை தரவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ஆனால் அரசு சார்பில் உரியவர் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட தொகைகளை சேர்த்து ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் வரை தருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக ரூபாய் 97 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. இந்த விபரத்தை தெரியாமல் ராகுல் காந்தி மத்திய அரசு ராணுவ வீரர்களை கண்டு கொள்வதில்லை என தவறாகக் பேசி வருகிறார். முதலில் அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என பேசினார் மேலும் அக்கினி பாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு நான்கு வருடங்களுக்கு பிறகு வேலை வாய்ப்பு தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் போன்றவை உறுதியாக கிடைக்கும் என்று பயிற்சி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அப்போது பாஜக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பலர் உடனிருந்தனர்.