கன்னியாகுமரி ஜூலை 31
அஞ்சுகிராமம் அருகே பால் குளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 வது ஆண்டு கார்கில் போர் வெற்றி நினைவு நாள் கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா தலைமையுரை ஆற்றினார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கவின் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் மாதவன் நன்றி கூறினார்.