ஈரோடு அக் 4
ஈரோடு பெருந்துறை ரோடு கே. சி. பி தோட்டத்தில் தமிழ் நாடு கியோகிஷன் கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது . குமிட்டே கட்டா ஆகிய பிரிவுகளின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிக்கு மாநில தலைவர் வள்ளி கனகராஜ் தலைமை தாங்கினார் .இந்த போட்டியில் கரூர் கோவை ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம் எல் ஏ வும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான விடியல் சேகர் பரிசு வழங்கி பேசினார் .
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமாரசாமி ஜோதீஷ்சுவரன் மற்றும் சந்திரசேகர் காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.