பூதப்பாண்டி – டிசம்பர்-14-
அழகிய பாண்டியபுரம் பேருராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் குறத்தியறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அழகியபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயா ஷீலா கேட்சன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமிற்கு தி.மு.க மாவட்ட பொருளாளர் கேட்சன், தடிக்காரங்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்ளின், தோவாளை சென்றியசேர்மன் சாந்தினி பகவதியப்பன் ஆகியோர்கலந்து கொண்டனர். முகாமில்தடிக்காரங்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் ஷானி விஸ்வநாத், ஆரல்வாய்மொழி மருத்துவ அலுவலர் ஷெரின் பானு மற்றும் அனைத்து துறை மருத்துவர்களும் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்கள்.