கன்னியாகுமரி ஜூன் 21
கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரைக்கு செல்லும் இடத்தில் இரும்பு கேட் அமைக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ் கண்டனம் தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் காலையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும், புனித நீராடவும் முக்கடல் சங்கம பகுதிக்கு வருகின்றனர்.
மேலும் ஆடி அமாவாசை,தை அமாவாசை போன்ற புனித நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து வழிபடுகின்றனர்.பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான திரிவேணி சங்கமம் செல்லும் பாதையை அடைத்து இரும்பு கேட் அமைக்கப்பட்டு வருகிறது . இதனால் மூன்று சக்கர வாகனத்தில் வரும் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் புனித நீராட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே புனித நீராட செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு எளிதாக செல்ல இடையூறாக இருக்கும் இரும்பு கேட்டை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.