கன்னியாகுமரி டிச 23
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர் – சூரிய உதயத்தை கண்டு அதனை செல்பி எடுத்தும் உற்சாகமடைந்தனர் – சுற்றுலா படகுகளில் கடலில் பயணம் செய்தபடி இயற்கை அழகை கண்டு களித்தனர் – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி களைகட்டி உள்ளது.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது உள்ளது அதிகாலை முதலே கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குவிந்து உள்ளனர் ஆந்திரா கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு நேராக கன்னியாகுமரிக்கு வருகை தந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விட்டு தங்கள் ஊர்களுக்கு புறபட்டு செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டும் அதனை செல்பி எடுத்தும் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும் உற்சாகமடைந்தனர் அதனைத் தொடர்ந்து சுற்றுலா படகுகளில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சென்று பார்வையிட்டு வந்தனர். சுற்றுலா பயணிகளின் மற்றும் ஐயப்ப பகதர்கள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி களைக்கட்டி உள்ளது.