நாகர்கோவில் ஜூலை 22
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது மாவட்ட ஆட்சியராக அழகு மீனா நேற்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். குமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் 100 சதவீதம் சென்றடையவும் பொதுமக்கள் எளிதில் அணுகும் விதமாகவும் 24 மணிநேரம் பணியாற்ற உள்ளதாகவும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டதில் 52 வது ஆட்சியராக பணியாற்றி வந்த ஶ்ரீதர் இந்து அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த அழகு மீனா கன்னியாகுமரி மாவட்டத்தில் 53வது ஆட்சியராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகு மீனா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இடம் மாறுதலாகி செல்லும் ஶ்ரீதர் அரசு கோப்புகளை ஒப்படைத்தார். சக அதிகாரிகள் புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அழகு மீனா கூறுகையில் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு 100 சதவீதம் சென்றடைய பணியாற்றுவேன்.
மக்கள் எளிதில் அணுகும் விதமாக 24 மணி நேரம் மக்களுக்காக பணியாற்ற நாங்கள் இருக்கிறோம்.
மாவட்டத்தின் முக்கியமான பணிகள் குறித்து ஆட்சியர் கூறியுள்ளார் அதனை சிறப்பாக செயல்படுத்துவோம்.
அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசித்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். என தெரிவித்தார்.