கன்னியாகுமரி மே 23
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட திருவிழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் விமர்சியாக நடைபெற வழக்கம் அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர் அதேபோன்று கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் தேர் திருவிழா காலை தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு தேரோட்டத்தை சிறப்பித்தனர். முன்னதாக தேரோட்டத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர் தேரோட்டமானது கோவில் சன்னதி வீதியை சுற்றி வந்தது. இதில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர்.