கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உட்கோட்டம் காவல்துறையின் சார்பில் பொது மக்களிடையே குற்ற வழக்குகளை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆணைப்படி, பர்கூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் ஆலோசனையில், பர்கூர் காவல் ஆய்வாளர் வளர்மதி தலைமையில் கந்திகுப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன்
குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் 1.குழந்தைத் திருமணம்
2.பெண் குழந்தைகள் பாலியல் வழக்குகள் 3.வீடுகளில் சிசிடி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் 4.வீடுகளில் ஆடு மாடுகளை வெளியே கட்டிருக்கும் போது தக்க பாதுகாப்பு ஏற்காடுகள் செய்யும் அறிவுறுத்தல்
5.பள்ளி கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லும் போது ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 181,1098, 1930, காவல் கட்டுபாட்டு எண் 100, தொடர்பு கொள்ளவும் 6.பொதுமக்கள் பண்டிகை விடுமுறை நாட்டில் வெளியூர் செல்லும் போது முன்னெச்சரிகையாக தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மூன்று தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், காய்கறி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு வழங்கி குற்றங்களை தடுக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
கந்திகுப்பம் காவல் நிலையம் விழிப்புணர்வு பிரச்சாரம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics