நாகர்கோவில் ஆக 24
கன்னியாகுமரி மாவட்டம்
தோவாளை(தெ) ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்காடு அருள்மிகு இலுப்பாவுடைய கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகுமாரி, ஈசாந்திமங்கலம் ஊராட்சி கழகப் பொறுப்பாளர் சாஸ்தான்குட்டிபிள்ளை மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.