கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மாணவர்களுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலக விளையாட்டு சங்கம் WSSA சார்பாக கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்ப சாம்பியன்ஷிப் 2024 போட்டி திங்கட்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த இன்டர்நேஷனல் போட்டிக்கு 7 நாடுகள் அதாவது இலங்கை, ரஷ்யா, மலேசியா, துபாய்,இந்தியா, யூயே,லண்டன்,உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து ஏராளமான ஆசான்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். கம்பத்திலிருந்து ஆசான் ராணாஸ் செந்தில், ,நிவேதா ராணாஸ் தலைமையில் 23 மாணவ,மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.இதில் 9 தங்கம் பதக்கங்கள், 12வெள்ளி பதக்கங்கள்,வெங்கலம் 24 பதக்கங்கள் என வென்று நமது இந்தியாவிற்கும் செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் கம்பம் வாழ் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் கூறுகையில் .
தனக்குத் தெரிந்த தற்காப்பு கலைகளை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தந்து மாவட்ட மாநில உலக அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற செய்த ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறைக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என மனமுருக கூறினர். இதனைத் தொடர்ந்து ஆசான் கூருகையில் . எங்களது கையில் எதுவும் இல்லை எல்லாம் அவன் செயல் எங்களுக்கும் நாங்கள் சென்று வர உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் இறைபற்றாளர்களுக்கு எங்களது குருகுலம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். மென்மேலும் பல சாதனைகள் படைக்க தேனி மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஊக்கவித்தால் இன்னும் அழிந்து வரும் தற்காப்பு கலைகளை வெளியில் கொண்டுவர உறுதுணையாக இருப்போம் என கூறினார்.
இதில் ஆசான்கள், பயிற்சியாளர்கள், மாணவ,மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.