தூத்துக்குடியில், மறைந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வ.உ.சி மார்கெட் முன்புறம் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளருமான இரா.சுதாகர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட் கட்சி உறுப்பினர்கள், மற்றும் முக்கிய பொறுப்பபளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.