மதுரை ஜூலை 17
மதுரை காமராஜர் சாலை நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆமெரிக்கன் கல்லூரி சமூகப் பணிகள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரோகினி மற்றும் காமராசர் கலைமன்ற நிறுவனர் முத்தரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து
இவ்விழா பள்ளித்தாளாளர் அ.ஞானசௌந்தரி தலைமையில் பள்ளி முதல்வர் சி.ஜோஸ்பின் ராணி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி
மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் உட்பட பெருந்தலைவர்கள் போன்று வேடம் அணிந்து பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
விழா நிறைவில்
பள்ளியளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பாராட்டு செய்யப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்
முன்னதாக விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ராணி பொன்னாடை போர்த்தி வரவேற்பு செய்தார்.