பரமக்குடி,மே.29 :
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் நீல நிற பட்டுடுத்தி இறங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் காட்சி அளித்து இறுதியாக தசாவதார நிகழ்ச்சியோடு விழா முடிவற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் நகர் முழுவதும் வீதி உலா வந்து வாணவேடிக்கைகள் முழங்க ஏராளமான தீவட்டி வெளிச்சத்தில் பொதுமக்களுக்கு காட்சி அளித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.
வைகாசி உற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பொதுமக்களுக்கு காட்சி அளித்து விட்டு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார்.
அதன்பின் கண்ணாடி சேவை தரிசனம் முடிந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பட விளக்கம் பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி உற்சவ விழாவின் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்த காட்சி