கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை அம்மன் கோவிலில் துர்க்காஷ்டமி திருவிழா வரும் 8-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. அதனை முன்னிட்டு
கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை புறப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட இருமுடி கட்டி, சந்தனக்கூடம் எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலமானது ஆனைப் பாலத்திலிருந்து துவங்கியது. ஊர்வலத்தை பாஜக மாவட்ட பொருளாளரும் விழாக்குழு துணைத்தலைவருமான டாக்டர் முத்துராமன் கொடியசைத்து துவக்கி வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.