நிலக்கோட்டை,செப்.17
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையை அடுத்த மிளகாய்பட்டி கிராமத்தில்
நூற்றாண்டு பழமைவாய்ந்த முத்தாலம்மன்,காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அந்த வகையில்
மிளகாய்பட்டி கிராமத்தில் ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீமுத்தாலம்மன்,ஸ்ரீகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது விழாவில்
பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் முளைப்பாரி ஊர்வலத்துடன் தாரைதப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வாஸ்து சாந்தி கோபூஜை விக்னேஸ்வர பூஜை விசேஷசந்தி பிரம்மாண்ட யாக வேல்வி பூஜைகள் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக அதிகாலை கடம் புறப்பாடாகி புண்ணிய கலசங்கள் ஆலயம் வளம் வந்து மூலஸ்தான தேவிகள் பரிகார தெய்வங்களுக்கு ஜெகதாம்பாள் அம்பிகை ஜொதீஸ்வரர் ஆலைய குருக்கள் ஜெயகுரு மருதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் சிறுமலை வீரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் அஜித்குமார் சிவம் கொண்ட சிவாச்சாரியர்கள் ஆகியோரால் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனின் இராஜ கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆதாதனைகள் பூஜைகள் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கரிகாலபாண்டியன்
மாபெரும் அன்னதானத்திட்டத்தை துவக்கி வைத்தார், இவ்விழாவின் போது ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபிரகாஷ் வார்டு உறுப்பினர் துரைப்பாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமிநாயக்கர் உட்பட்ட கிராம
சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் மிளகாய்பட்டி கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.