களியக்காவிளை, ஜன-18
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 2022-ம் ஆண்டு மாணவர் ஷாரோன்ராஜை, அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கீரீஷ்மா அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . தாய் சிந்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தாய் மாமா நிர்மலகுமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை குறித்த தீர்ப்பு இன்று 18-ம். தேனி வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.