கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு “கலைத்திருவிழா”, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 60 மாணவ/மாணவியர்களுக்கு பரிசுக்கான கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகளும் மற்றும் 12 கல்லூரி விடுதிகளும் மொத்தம் 47 விடுதிகள் இயங்கி வருகின்றது. மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை “கலைத்திருவிழா” என்ற பெயரில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட வியைாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், அரசுக் கல்லூரி பேராசிரியர் ஆகியோர் உள்ளடக்கிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 60 மாணவ/மாணவியர்களுக்கு, ஒவ்வொரு போட்டிகளுக்கும் முறையே முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுக்கான கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.தினேஷ் குமார், , அவர்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .பத்மலதா மற்றும் விடுதி காப்பாளர்கள், விடுதி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.