முதலமைச்சர் கோப்பைக்கான -2024 ,நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை 9 தங்கம்,3 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கம்பெற்று சாதனை!
முதலமைச்சர் கோப்பை 2024 க்கான மாவட்ட அளவில் நீச்சல் போட்டிகள் விருதுநகரில் நடைபெற்றது.
இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சஞ்ஜெய் குமார், தீபன்ராஜ் மனேந்திர சிங் , .ராகேஷ் , கு.கனேஷ் , மகாலக்ஷ்மி , வர்ஷா , ஆகியோர் கலந்துகொண்டு, 9 தங்கம்,3 வெள்ளி, 1 வெண்கலம் பெற்று ஆக மொத்தம் 13 பதக்கங்களும் ,34,000 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்று சாதனை புரிந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டி யில், மாவட்டத்திலிருந்து மொத்தம் 8 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
வேந்தர் கே.ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர்.எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர்.எஸ். நாராயணன்,
பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் ஆகி யோர். விளையாட்டு வீரர்கள்ளையும், விளையாட்டு இயக்குநர்கள் சிதம்பரம். விஜயலட்சுமி. செல்வகுமார், நீச்சல் பயிற்ச்சியாளர் உதயகுமார் ஆகியோரையும் பாராட்டினர்.