ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி, 36 வது ஆண்டுவிழா தலைவர் முனைவர் க. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் டாக்டர் அறிவழகி, செயலாளர் முனைவர் எஸ். சசி ஆனந்த், டைரக்டர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெங்கடேஷன் வரவேற்புரை வழங்கி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
பார்மசி கவுன்சில் இந்தியா தலைவர் மற்றும் அவியான் பார்மாசூட்டிக்கல்ஸ் தலைமை நிர்வாகி, டாக்டர் மோண்டு குமார் எம். படேல் தலைமை விருந்தினராகவும், மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் என். முருகேஷ் ,டாக்டர் குஷ்பூ மோண்டு குமார், இந்திய பார்மசி கவுன்சில் உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் , கலசலிங்கம் பல்கலை நிர்வாகக் குழு உறுப்பினர், டாக்டர் ஜி. சுவாமிநாதன், கேரளா, செயின்ட் ஜான்ஸ் பார்மாசூட்டிகல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.ராஜபாண்டி ஆகியோரும் கலந்து கொண்டனர். பல்கலைத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கும், நூறு விழுக்காடு தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்களை தலைமை விருந்தினர் வழங்கினார்.
மேலும்,தேர்வுகளில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவரகளுக்கு பேராசிரியர் முருகேசன் ரொக்கப் பரிசு வழங்கினார். பெற்றோர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.