கலசலிங்கம் கலைக் கல்லூரியில்
20 வது விளையாட்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில்,
அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 வது விளையாட்டு விழா வேந்தர் முனைவர் கே.
ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள்,சான்றிதழ்கள், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையும் வேந்தர் வழங்கி பாராட்டினார்.
உடற்கல்வி ஆசிரியர் எம். சந்திரன் , பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளையும்,விழாவையும்,சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.