கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே.வி.எஸ்.தணிகாசலம் அவர்களின் இல்லத் திருமண விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது,
இந்த திருமண விழாவிற்கு கலந்துக் கொள்வதற்காக சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு
வருகைதந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான கே.வி. தங்கபாலு அவர்களுக்கு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது,
இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் பிரமுகர் கே.வி.எஸ். தனிகாசலம் அவர்களின் மகள்
ஜோதிஸ்வரியின் திருமண நிகழ்ச்சி நடைப்பெற்றது,
இந்த திருமணவிழாவில் கலந்துக் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான
கே.வி. தங்கபாலு திருமணத்தினை நடத்தி வைத்து, மணமக்களான ஜோதிஸ்வரி, அஸ்வின்குமார் ஆகிய இருவரும் இணைப்பிரியாத வகையில் என்றும் பல்லாண்டுக் காலம் உடல் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று என்றும் நாமுடன் வாழ வேண்டி மணமக்களை அர்சனைத்தூவி வாழ்த்தினார்,
அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினுரும், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும்மான
எல். சுப்பிரமணியன், மாநில செயலாளர் ஏகம்பவாணன் கங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, முன்னாள் மாவட்ட தலைவர்கள், கிருஷ்ணமுர்த்தி,
ராஜா குமாரவேல், நாரயணமூர்த்தி,முன்னால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பனர்கள்
துரை என்ற துரைசாமி, முத்து குமார், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர், கலைப் பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இராமசந்திரன், கவுசிலர்கள் இராதாகிருஷ்ணன், வினாயகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுக சுப்பரமணி
மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன், யுவராஜ், யாதவராஜ், கோவிந்தன், கருணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் இவ்விழாவில் கலந்துக்
கொண்டனர்கள்.