தென்தாமரைகுளம்., நவ. 2.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 49-வது வார்டு ஐ.எஸ்.இ. டி நகர் ஐ. ஆர். ஆர். எப் குடியிருப்பு மக்கள் கூட்டமைப்பின் தொடர் முயற்சியால் ஐ. எஸ். இ. டி நகர் 6-ம் தெரு மேற்கு 1-ஆம் குறுக்கு சாலையில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியை தெங்கம்புத்தூர் மின் பொறியாளர் அருண் இயக்கி துவக்கி வைத்தார். உடன் 49-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெய விக்ரமன் மற்றும் குடியிருப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள், ஊர் பெருமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஐ.எஸ்.இ.டி நகர் மின்பிரச்சினை தீர்ப்பதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கிக்கொண்டிருப்பதற்கும். மின்சாரதுறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் குடியிருப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.