சங்கரன் கோவில்; ஜீன்:15
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மாரியம்மாள்(55) என்ற நோயாளி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா வழிகாட்டுதலின் படி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகர் ஆலோசனையின் படி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் விஸ்வநாத் பிரதாப் சிங் , முத்துராமன்,மயக்க மருத்துவர்கள் ஜெய பாஸ்கர், அர்ச்சனா,பாலசுப்ரமணியன், யோகாம்பிகை மற்றும் செவிலியர்கள் அழகுத்தாய் , ஜான்ராஜ், உதவியாளர் சரவணன் அடங்கிய மருத்துவ குழுவினர் மூட்டு பகுதியில் பாதிக்கப்பட்ட மாரியம்மாளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தனர். முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
Leave a comment