நாகர்கோவில் ஜூலை 4
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள என்.எஸ் கிருஷ்ணன் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர் . தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தற்போது வட்டார அளவில் நடந்து வருகிறது. இது மாநில அளவில் கொண்டு செல்லும் வகையில் அரசானை 243 ஜ தமிழக அரசு கொண்டு வந்து உள்ளது .. வட்டார அளவில் உள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருவதால் அது மாணவர்களுக்கும் எளிதாக இருந்தது எனவே இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு நடத்தப்படும் தனித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அந்த வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை அரசு நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்