கரூர் மாவட்டம் – ஜுலை – 15
திராவிட நாயகர், கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையை ஏற்று.
கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துகளுடன்
கரூர் மாவட்டக் கழக செயலாளர் வீ. செந்தில்பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி
கரூர் மாநகராட்சி, 32வது வார்டு, முத்துராஜபுரம் பகுதியில் அதிமுகவை சேர்ந்த பூத்கமிட்டி உறுப்பினர்கள், இளங்கோ, பாண்டியன், விஸ்னுராம், அண்ணாவி, விஸ்வநாதன், ராஜேஷ், மணிவேல், சக்திவேல், சுரேஷ், முத்துராஜா, கோபால், ஜீனத், அனுசுயா, குப்பாயி மற்றும் தேமுதிகவை சேர்ந்த மனோகரன், பெரியசாமி, கண்ணதாசன், கணேசன், சுப்பிரமணி, நமசிவாயம் உள்ளிட 23 பேர் கரூர் மாநகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ், கரூர் மத்திய பகுதி பொறுப்பாளர் வி.ஜி.எஸ்குமார், கரூர் மத்திய கிழக்கு பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராஜா ஆகியோர் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். வார்டு கவுன்சிலர் நிவேதா, வார்டு கழக செயலாளர் ஆர்.எஸ்.அன்பு உள்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.