மதுரையில் மடீட்சியா அமைப்பும் ரோட்டரி இயக்கமும் இணைந்து நடத்தும் மெகா வேலை வாய்ப்பு முகாம் 28 ஆம் தேதி சனிக்கிழமை இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி கூறியதாவது, வாகை ஜாப் பேர் என்ற பெயரில் நடைபெறும் இதில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டதாரிகள் டிப்ளமோ ஐடிஐ திறன் பயிற்சி 10, 12 ஆவது படித்து முடித்த மாணவர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே மதுரையை தளமாகக் கொண்ட 30 நிறுவனங்கள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்து உள்ளன. நேர்காணல் செய்ய நிறுவனங்களுக்கு தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2024 இல் தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம். ஐடி கணக்குகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கண்டன்ட் கிரியேட்டர் இன்ஜினியரிங் நர்சிங் போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்கள் மாத சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். தேர்வு செயல்முறை மற்றும் நேர்காணலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாலைக்குள் பணி நியமன ஆணை கடிதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தெரிவித்தார்.
வேலை வாய்ப்பு முகாம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics