கல்லூரி முதலாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து கலந்தாய்வு
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து கலந்தாய்வு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.காந்தித்துறை தலைமையில் முனைவர் எம். கற்பகம் தமிழ்த்துறைப் பேராசிரியர். முனைவர் எஸ். உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் தமிழ்துறைப் பேராசிரியர், முனைவர் செந்தில் நாரயணன் ஆகியோர் வரவேற்புறை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த்துறையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பா. ஆசைத்தம்பி இளங்கலை முதலாம் ஆண்டு முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது கல்லூரி துறை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.