நாகர்கோவில் ஆக 22
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 118-வது பிறந்தநாளை தினத்தை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் பூதப்பாண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஜீவாகணேசன், கழக மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சுகுமாரன், பார்வதி, தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, ஒன்றிய கவுன்சிலர் அய்யப்பன், பேரூர் கழகச் செயலாளர்கள் எபிஜாண்சன், பெருமாள், பிரம்மநாயகம், சுடலையாண்டி, குமார், குமரேசன், பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகன்பிள்ளை, மரிய அற்புதம், ஞாலம் ஜெகதீஷ், அருணாச்சலம், தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகிணி அய்யப்பன், ராபி முஸ்தப்பா, மிக்கேல்ராஜ், அஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.