சென்னை அசோக் நகரில்
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்திரா குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு சர்வசக்தி விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இக்கோவில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதராய் போற்றப்படும் ஸ்ரீ சர்வசக்தி விநாயகர், ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதிட சிரோன்மணி சுவாகமவித்வான் கும்பாபிஷேக கலாநிதி ஆர்.சுவாமிநாத சிவாச்சாரியார் சர்வ ஸாதகப்படி ஆலய அர்ச்சகர் ஜோதிட சிரோன்மணி ஏ.வெங்கட்ராம சிவம் ஆகியோர் முன்னிலையில் விழாக் குழுத் தலைவர் எம்.ஸ்ரீதரன் சிறப்பாக செய்திருந்தார். இந்த விழாவில் ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் பி.கோபிநாத் மற்றும் ஆலய நிர்வாகிகள் என்.அருண்குமார் அருணா செந்தில் குமார் ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.