முதுகுளத்தூர், மார்ச் 3
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொதுக்கூட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமை வகித்தார். கழக எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளர் மு.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாn.நகர் கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். 15க்கு மேற்பட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ். பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். நலத்திட்ட உதவி:- 300 பெண்களுக்கு சேலையும், 300 ஆண்களுக்கு வேஷ்டியும் காது கேளாத அதிமுக தொண்டர் ஒருவருக்கு காது மிஷின் வாங்கிட நிதி உதவியும் முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன் சார்பில் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டனர். எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தமிழக அரசின் உளவுத்துறை கூறுகிறது. அரிசி விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு மற்றும் சிலிண்டர் விலைகுறைப்பு, 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்துவது என பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். எடப்பாடியார் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியை பிடிக்கும் என்று பேசினார். கூட்டத்தில் கடலாடி ஒன்றிய கழக செயலாளர், ஆப்பனூர் என்.கே.முனியசாமிபாண்டியன், பெருநாளி எஸ்.பி.காளிமுத்து, தேரிருவேலி கருப்புசாமி, கர்ணன், விளங்குளத்தூர் முத்துவேல், ஒன்றிய அவைத்தலைவர் முத்துமணி அம்சராஜ், உள்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கூடியிருந்தனர்.