ராமநாதபுரம், பிப்.25-
ராமநாதபுரம் பாரதிநகரில் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள்
விழாவில்
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் டாக்டர் ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில்
அம்மா பேரவை துணைச்செயலாளர் முனியசாமி , எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம் , மாணவரணி துணைசெயலாளர் செந்தில்குமார் மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் கவிதாசசிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானிசீனிகட்டி ஆகியோர்களின் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் மாரியப்பன் ஆகியோரின் விழாவை ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன் உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கிளை கழக மேலவை பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் பெருதிரளாக கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் வினோத் நன்றி கூறினார்.