தென்தாமரைகுளம் பேரூர் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த தின விழா —- கேக் வெட்டி கொண்டாட்டம் தென்தாமரைகுளம்., பிப். 25.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தென் தாமரைக்குளம் பேரூர் அதிமுக சார்பில்
பேரூர் கழக செயலாளர் தாமரை டாக்டர் சுதன். தலைமையில்,அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தாமரை தினேஷ் சிறப்பு விருந்தினாராக கலந்து கொள்ள, ஒன்றிய பொருளாளர், தங்கவேல்,தென்தாமரைக்குளம் பேரூர் அவைத்தலைவர். பூவை ஆர். நடராஜன், தங்கநாடார், பால்ராஜ், முகுந்தன். தங்கராஜா. ஜெயகிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி,இனிப்புகள் வழங்கி , வேட்டி சேலைகள் வழங்கி , 6 ஊர்களில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் செந்தில்,பாலன்,முத்துக்குமார், முத்துசாமி, மோகன், ஐய்யாவு கண்ணன், சுந்தர்லிங்கம்,ரெத்தின ராஜ், முத்து நாகமணி. காசி தங்கம், அனந்தசயணன் முத்துலெட்சுமி,உட்பட பலர் கலந்து கொண்டனர்