வேலூர் மாவட்டம்
வேலூர் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி மற்றும் கேஎல்வி சாம்பியன்ஸ்
கிளப் நடத்திய தென்னிந்திய அளவிலான 2024 ஆம் ஆண்டின் கராத்தே போட்டி.
வேலூர்_03
வேலூர் மாவட்டம், வேலூர் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி மற்றும் கேஎல்வி சாம்பியன்ஸ்
கிளப் வேலூர் இணைந்து நடத்திய தென்னிந்திய அளவிலான 2024 ஆம் ஆண்டின் கராத்தே போட்டி இந்திய தலைமை கராத்தே பயிற்சியாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் திரைப்பட நடிகர் பொன்னம்பலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார். உடன் தென்னிந்திய தலைமை பயிற்சியாளர் கராத்தே கே. லச்சி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கராத்தே எல். விக்னேஷ் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், பலர் கலந்து கொண்டனர்.