தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் மற்றும் எம்பி நவாஸ் கனி அடிக்கல் நாட்டினார்
ராமநாதபுரம், நவ.24-
ராமநாதபுரம் மாவட்டம் அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மலேசியா அக்கியூத்து ஜமாத் சார்பில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு பாராட்டு விழா மற்றும் ஹாஜி கே.கே. வணிக வளாக திறப்பு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசியா பிலித்தா குழுமம் நிறுவனர் டத்தோ கே.கே. சிஹாபுதீன் தலைமை வகித்தார். மலேசியா பிலித்தா குழுமம் நிறுவனர் டத்தோ ஹாஜி கே.உஸ்வத் கான் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சமஸ்தி கேரளா இஸ்லாமிக் கல்வி வாரியம் பாலக்காடு செய்யது ஷாபிக் அலிஷிஹாப், சமஸ்தே கேரளா இஸ்லாமி கல்வி வாரியம் பொதுச் செயலாளர் அப்துல்லா ஹஜ்ரத், ஹம்ஸா குட்டி பாகவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அத்திகயூத்து முஸ்லிம் ஜமாத் தலைமை இமாம் முகம்மது ஆசாத் நூரி கிராத் ஓதினார். முப்பெரும் விழாவில்
ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அமைப்பதற்கு
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அடிக்கல் நாட்டி கேகே வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர்
ஏற்புரையில் பேசியதாவது:
மலேசியாவில் பெரிய அளவில் தொழில் செய்து வந்தாலும் சொந்த மாவட்டத்தையும் சொந்த ஊரையும் மேம்படுத்த வேண்டும் மருத்துவம் கல்வி உயர்த்த வேண்டும் அதற்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இன்று அரபிக் கல்லூரி அமைக்க இடத்தை தானமாக வழங்கி இங்கு வணிக வளாகம் அமைத்து அந்த வணிக வளாகத்தில் வரும் வருமானத்தை ஜமாத்திற்கும் கல்விக்கும் பயன்படுத்திக்கொள்ள கூறியுள்ளது பெரிய உதவியாகும். இவர்கள் மலேசியாவில் இருந்தாலும் அங்கிருந்து என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு ஊரின் நலன் கருதி நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவி செய்வது சிறப்பான பணியாகும். அவர்கள் நிலையான தர்மமாக கல்வி நிறுவனம் அமைத்தது ஊரின் வளர்ச்சி அடைய ஒரு வழிகாட்டி ஆகும். இது ஊருக்கே பெருமை சேர்க்கும் செயலாகும், இறைவன் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்,
இவ்வாறு பேசினார்.
ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஷாஜகான்,
ஐக்கிய ஜமாத் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம், பொருளாளர் பஹ்ருல் அமீன், ஜமாத்துல் உலமா மாவட்டத் தலைவர் முகமது ஜலாலுதீன், மாவட்டச் செயலாளர் ஜலாலுதீன் மன்பயீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மலேசியா அத்தி குத்து முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள், அத்திவித்து முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், ரமலான் தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், ஜமாலியா முஸ்லிம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள், வகி தியா முஸ்லிம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு ஜமாத் தலைவர்கள் சித்தார் கோட்டை தேர் போகி பனைக்குளம் உள்ளிட்ட பகுதி முக்கியஸ்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அத்தியூத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் மாலிக் அத்தியூத்து கிராமத்தில் கல்வி நிறுவனம் மற்றும் வணிக வளாகம் துவங்கிய மலேசிய தொழில் அதிபர்கள் சேவையை பாராட்டி நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.