கிருஷ்ணகிரி- ஜூன்-15-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, பாவக்கல், மூன்றாம்பட்டி, சின்னதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, நாயக்கனூர், பெரியதள்ளப்பாடி, கோவிந்தாபுரம், நடுப்பட்டி, எக்கூர் ஆகிய 9 தொகுதிகளில் உள்ள 34 கிராமங்களுக்கான 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி முதல் நாள் நிகழ்ச்சியில் சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட பாவக்கல் தொகுதி, கரியபெருமாள் வலசை, புளியம்பட்டி, நல்லவம்பட்டி, மூன்றாம்பட்டி தொகுதி, கேதுநாயக்கம்பட்டி தொகுதி, ஒபக்கவலசை, கொட்டுகாரன்பட்டி, சின்னதள்ளப்பாடி தொகுதி, மிட்டப்பள்ளி, சாமகவுண்டன் வலசை, சிங்காரப்பேட்டை தொகுதி, நார்சாம்பட்டி, குருகப்பட்டி, புளியனூர், தீர்த்தகிரிவலசை, மல்லுப்பட்டி, நாய்க்கனூர் தொகுதி, கெண்டிகானூர், பொம்மதாசம்பட்டி, பெரியதள்ளப்பாடி தொகுதி, ரெட்டி வலசை, கிட்டம்பட்டி, கோவிந்தாபுரம் தொகுதி, கொம்மம்பட்டு, கெடகாரனூர், ரெண்டாதம்பட்டி, நடுப்பட்டி தொகுதி, வெங்கட்டாபுரம், குப்பநத்தம், எட்டிப்பட்டி, எக்கூர் தொகுதி, புதூர், ஆண்டியூர் ஆகிய 34 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து
முதியோர் உதவித்தொகை கோரி 2 மனுக்களும், பட்டா மாற்றத்திற்கு 30 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கு 73 மனுக்களும், வீட்டுமனை பட்டா வேண்டி 27 மனுக்களும், ஊரக வளர்ச்சித்துறைக்கு 11 மனுக்களும், பட்டா ரத்து குறித்து 7 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 4 மனுக்களும், நில அபகரிப்பு குறித்து 1 மனுவும், வட்ட வழங்கல் பிரிவிற்கு புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பாக 5 மனுக்களும், கிராம கணக்கில் மாற்றம் வேண்டி 36 மனுக்களும், இதர துறை மனுக்கள் 19 என மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றதை தொடர்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 34 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான அ பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், சூளகிரி மற்றும் அஞ்செட்டி, ஊத்தங்கரை ஆகிய 8 வட்டங்களில் 14.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இரண்டாவது நாள் 18.06.2024 செவ்வாய் கிழமை அன்று அத்திப்பாடி, மகனூர்ப்பட்டி ஆகிய 2 தொகுதிகளுக்குட்பட்ட 8 கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர்களிடம் வழங்கலாம். தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம், ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.36 இலட்சம் மதிப்பில் நடைபாதையில் புதியதாக பேவர்பிளாக் அமைக்கப்படவுள்ளதையொட்டி, பொதுமக்களின் பங்களிப்பு ரூ.12 இலட்சத்திற்கான காசோலையை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், வித்தியா மந்திரி பள்ளி தாளாளர் ஆகியோர் வழங்கினர்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது .பி.புஷ்பா, வட்டாட்சியர் .திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர் .பாலாஜி, பேரூராட்சி செயல் அலுவலர் .ரவிசங்கர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் .தேவராஜ், வித்தியா மந்திரி பள்ளி தாளாளர் .சந்திரசேகரன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .சி.ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.