திருவாரூர்
பிப்ரவரி 17
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் 1.4.2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி காண ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் வருவதை களையப்பட வேண்டும்,
ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக வரன்முறை படுத்த வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் சுந்தர் ஒன்றிய தலைவர் ராமலிங்கம் அரசு பணியாளர் சங்க வட்டார செயலாளர் புனிதா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டார தலைவர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.