வேலூர் ஏப்.23
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை மீண்டும் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையினை ரத்து செய்து அனைவருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்றது.
அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஆ.ஜோசப் அன்னையா, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், சகேயு சத்யகுமார் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், அக்ரி.இ.ராமன் ஜி.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சினேகலதா, ஜி.டி.பாபு (ஆசிரியர் முன்னேற்ற சங்கம்) எ.டி.அல்போன்ஸ்கிரி (தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்) மற்றும் தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.