ராமநாதபுரம், ஏப்.23-
தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரம் அண்ணா சிலை முன்பாக துவங்கிய ஜாக்டோ ஜியோ பேரணியை வருவாய்த்துறை நிர்வாகி காசிநாதன் துரை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவ பாலன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்டத் தலைவர் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் பூப்பாண்டியன்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை அமல்படுத்த கோரி முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் மாரிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராபர்ட் ஜெயராஜ், முத்து முருகன், அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி உள்பட கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி அண்ணா சிலை முன்பாக துவங்கி வண்டிக்காரர் தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரண்மனையில் பேரணி நிறைவடைந்தது. அரண்மனையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் கோரிக்கைகளை விலக்கிப் பேசி பேரணியை நிறைவு செய்தார்.