தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வு துறையின் சார்பில் புதியதாக 6 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்