திருப்பூர் ஜூலை: 1
போயம்பாளையம் அருகே நஞ்சப்பா நகரில் நடைபெற்ற பவள கும்மி ஆட்டத்தை 123 வது அரங்கேற்ற விழா 500-க்கும் மேற்பட்ட நடன குழுவினருடன் மாமன்ற உறுப்பினர் கவிதா விஜயகுமார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மாமன்ற உறுப்பினர்கவிதா நமது பண்பாட்டையும் நமது கலாச்சாரத்தையும் காப்பது நமது கடமை எனவும் இந்த பவள கும்மியாட்டம் கொங்கு நாட்டு பாரம்பரிய விழாவில் முக்கியமானதாக கருதப்படுவதாகவும் சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நடனத்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். பவளக்கொடி கும்மியாட்ட ஆசிரியர் அம்மன் விஸ்வநாதன் கும்மியாட்ட கலை குழுவினர் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ் .முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி.மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளானோர் பங்கேற்று இந்த அரங்கேற்ற விழாவினை கண்டு ரசித்தனர்.